வரலாறு

சக்தி இல்லம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மீன்பாடும் திருநாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி எனும் சிறப்புப் பொருந்திய ஊரில் அமைந்துள்ள சக்தி இல்லமானது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அருள்திரு பங்காரு அடிகளாரின் அருள்வாக்கின் பிரசாதமாக, போர் அனர்த்தம் மற்றும் ஆழிப்பேரலையில் (சுனாமி) தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் அவலத்தை நீக்கும் பொருட்டும், அவர்களின் எதிர்கால சுபீட்சமான வாழ்க்கை கோலத்தை அமைக்கும் பொருட்டும் நிறுவப்பட்டு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் நெறிப்படுத்தப்பட்டும் வருகின்றது. இது வெறுமனே பெண் குழந்தைகளை பராமரிப்பது மட்டுமல்லாது, மேல் மருவத்தூர் அம்மாவின் பஜனைக்கான மன்றம் ஒன்றையும் நிறுவி, அதனூடு மாற்று வலுவுள்ளோருக்கான உபகரணங்கள், முச்சக்கர வண்டிகளை வழங்கல், சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் (தையல் இயந்திரம், தோட்ட உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல சமூக சேவைகளையும் ஆற்றி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் மன்றத்தில் வாரந்தோறும் ப+ஜைகள், அன்னதானம் வழங்கல், மற்றும் பல கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.