எம்மைப்பற்றி

வரலாறு

இலங்கையைப் பிறப்பிடமாகவும் சுவீஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.உதயதாஸ் தம்பிப்பிள்ளை அவர்கள்.ஒரு நாள்அவரது கனவில் இந்தியாவில் உள்ள மேல்மருவத்தூர் சித்தர்பீட ஆலயத்தின் அமைப்பையும் அருள்திரு அம்மா அவர்கள் அவரை வந்து தடவி விடுவது போலவும் கண்டார். அதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூருக்கு போகவேண்டும் என்று ஆசைப்பட்டு அங்கு சென்றார். அங்கே ஆலயத்தின் அமைப்பு அவர் கனவில் கண்டது போலவே இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டார். அருள்திரு அம்மா அவர்களையும் தரிசித்தார். அம்மா அவர்களின் ஆணைப்படி 1997 ம் ஆண்டு இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமந்துள்ள களுவாஞ்சிகுடி என்னும் ஊரில் சக்தி இல்லம் எனும் சிறுமிகள் பராமரிப்பு இல்லத்தை நிறுவினார். அதைத்தொடர்ந்து 1999ம் ஆண்டு அருள்திரு அம்மாவின் ஆணைப்படி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தையும் சக்தி இல்லத்தோடு இணைந்த்தாக நிறுவினார். இம்மன்றத்தை மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் பதிவு பண்ணுவதற்கு அருள்திரு அம்மா அவர்களே நேரடியாக ஆணையிட்டது ,அங்குள்ள நிர்வாக உறுப்பினர்களை ஆச்சரியபட வைத்தது. இவ்வாறே சக்தி இல்லமும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றமும் உருவாக்கப்பட்டு இன்றுவரை அம்மாவின் அருளால் நல்லபடியாக நடைபெற்று கொண்டு வருகின்றது.

கட்டிட்ட அமைப்பு

நிருவாகஅமைப்பு

 1.  பணிப்பாளர்: திரு.தம்பிப்பிள்ளைஉதயதாஸ்(Swiss).
 2. தலைவர்:  திருவி.இராஜலிங்கம்.
 3. செயலாளர்: திருமதி:அ.இராஜேஸ்வரி.
 4. பொருளாளர்: செல்வி:ஜீவமணி.
 5. உறுப்பினர்:
  •  திருமதி.ம.செளந்தர்ராஐன்
  •  திருமதி.கு. சியாமளா
  •  திருமதி.ர.கீதாதேவி
  •  திருமதி.கி.நவமணி

முகாமைத்துவஅமைப்பு

 1.  முகாமையாளர்–01
 2.  மேற்பார்வையாளர்–03(ஒவ்வொரு வீட்டிற்கும்)
 3.  சமையலாளர்கள்–02
 4.  காவலாளிகள்–02
 5.  அலுவலகஊழியர்கள்–02

பிள்ளைகளின்விபரங்கள்:

 1. கல்வி கற்கும் பாடசாலை: மட்.பட்.பட்டிருப்ப்பு ம.ம.வி(தேசியபாடசாலை)
 2. பாடசாலைசெல்லும் தூரம்: 1கி.மீ
 3. தரம் 1 தொடக்கம் க.பொ.த(உ.த) வரை கல்வி கற்கும் பிள்ளைகள் உள்ளனர்
 4. தரம்1இல் கல்வி கற்போர்:01
 5. தரம்4இல் கல்வி கற்போர்02
 6. தரம்66இல் கல்வி கற்போர்01
 7. தரம்8இல் கல்வி கற்போர்07
 8. தரம்9இல் கல்வி கற்போர்06
 9. தரம்10இல் கல்வி கற்போர்03
 10. தரம்11இல் கல்வி கற்போர்02
 11. க.பொ.த(உ.த)கல்வி கற்போர்09
 12. 2014இல்க.பொ.த(உ.த)பரீட்சை எழுதியோர்05

விசேடமாக கல்வி வழங்கல்

தரம் 6 முதல் தரம் 9வரை கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு S.R.S.C நிறுவனம் இலவசமாக மாலை நேரம் கல்வி வழங்குகின்றனர். க.பொ.த(உ.த) கல்வி கற்கும் பள்ளைகளக்கு ஹிமாலயா நிறுவனம் இலவசமாக கற்பதற்கு உதவுகின்றனர். க.பொ.த(சா.த) பிள்ளைகளுக்கு இல்லத்தில் விசேட வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றது.

சமயம் சார்ந்த நிகழ்வு

 1. இந்து கலாசார திணைக்களத்தினால் நடாத்தப்படும் அறநெறி வகுப்புக்கள்.
 2. பண்ணிசை வகுப்புகள்.
 3. ஒவ்வொரு நாளும் காலை 6.15மணிக்கும் மாலை 4.30 மணிக்கும் வழிபாடு நிகழ்தல்.
 4. பங்காரு அடிகளாரின் ஆன்மிக வகுப்பில் மேல்மருவத்தூர் அம்மாவின் வழிபாட்டு முறைகளும் பூஜை முறைகளும் வேள்வி முறைகளும் பூமாலை கட்டுதல் கலசநூல் சுற்றுதல் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

பிள்ளைகளின் சுகாதாரம்

 1. போசாக்கான நிறை உணவு அட்டவணை ஒழுங்கின்படி .
 2. உணவு வழங்கப்படுகின்றது.
 3. காற்றோட்டமான நுளம்பு வலையுடன் கூடிய.
 4. படுக்கையறை வசதி உண்டு.
 5. மாதாந்த வைத்திய ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றது.
 6. சுத்தமான மலசலகூட வசதிகளும் உண்டு.
 7. சுத்திகரிக்கப்பட்ட குடிமநீர் வசதிகளும் உண்டு.

கலை கலாசாரம் சார்ந்த நிகழ்வுகள்

அவதார திருநாள் ஆடிப்பூரம் நவராத்திரி போன்ற விழாக்களில் நடனம் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவர். மாதாந்தம் பூரண தினத்தில் கலை நகழ்ச்சிகள் நடாத்துவர்

போட்டி நிகழ்வுகள்.

 1. பேச்சுப் போட்டி.
 2. பண்ணிசைப் போட்டி..
 3. கோலப் போட்டி.
 4. சித்திரப் போட்டி.
 5. கிரிகற் போட்டி.

நன்கொடை விபரங்கள்.

உதவி வங்குபவர் விபரங்கள்.

கணக்கறிக்கை..

மாதாந்த வருடாந்த கணக்குகள் பிரதேச செயலக கணக்காளரால் மேற்பார்வை செய்யப்பட்டு சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தினால் பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றத்து.

மாலை வளரும் அற்புதம்.

2011 மாச்மாதம் முதல் இன்று வரை இல்லத்தின் எல்லா அறைகளிலும் வைக்கப்பட்டுள்ள அன்னை ஆதிபராசக்தியின் கருவரைப்படம் குருபடம் யாவற்றிலும் அணிவிக்கப்படும் மலர்மாலைகள் தொடர்ந்து வளர்ந்தவண்ணம் உள்ளது.

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எதிர்பார்க்கப்படும் உதவிகள்..

 1. பாடசாலைக்கான பாதணிகள்
 2. முதலுதவி சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்
 3. கல்வி உபகரணங்கள்
 4. மின்விசிறிகள்
 5. பிள்ளைகளின் ஆடைகள் வைப்பதற்கான அலுமாரிகள்
 6. போர்வைகள்
 7. பெரிய சமையலுக்கான நிர் ஏற்றப் பயன்படும் மோட்டர்
 8. வினாவிடைப் பயிற்சி புத்தகங்கள்