அம்மா

about-content amma-content மேல்மருவத்தூர் தலவரலாறு

இது ஒன்றும் புதிதான, புதிரான விடயமல்ல நாம் இத்தனை காலங்களாக வணங்கிவரும் தெய்வங்களின் தாயான அன்னை ஆதிபராசக்தி இக்கலியகத்தில் தன்னைதானே பிறப்பித்துக் கொண்ட அவதார நாடகம் தான் மேல்மருவத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்று. இந்தியாவில் சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 92கி,மீ தொலைவில் மேல்மருவத்தூர் எனும் ஓர் ஊர் அமைந்துள்ளது, இன்றைக்குப்பல ஆண்டுகளக்கு முன்பு தற்போது சித்தர்பீடம் அமைந்துள்ள இடத்தில் சூலவடிவத்தில் வேப்பமரமொன்று இருந்து . அதிலிருந்து அதிசயமாக பால் வடியத் தொடங்கியது. அப்பாலை பருகியவர்களின் நோய்கள் தீர்ந்த வண்ணம் இருந்தது. அதே நேரத்தில் 1941 ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி இவ்வுலகத்திற்கெல்லாம் ஒளி கொடுக்கும் சூரியனாக அதிசயமான முறையில் கோபாலநாயகர் மீனாம்பாள் அகிய தம்பதிகளுக்கு ஓர் குழந்தை பிறந்து பங்காரு(தங்கம்) எனும் நாமத்துடன் வளர்ந்து வந்தது. இக் குழந்தை வளர்ந்து வரும் சமயத்தில் பால் வடிந்த வேப்பமரம்1966 ம் ஆண்டு வீசிய பெரும் புயல் காற்றால் தரையில் விழுந்தது அப்போது அங்கே ஒரு சுயம்பு வெளிப்பட்டது. அச்சமயத்தில் அருள்திரு பங்காரு அடிகளார் மூலம் அன்னை ஆதிபராசக்தி வெளிப்பட்டு நான் தெய்வத்திற்கெல்லாம் தாயான அன்னை ஆதிபராசக்தி இவ்வுலகத்திற்கு அவதாரமாக வந்துவிட்டேன் என்ற உண்மையை உலத்திற்கு கூறினார். அன்றிலிருந்து இன்றுவரை அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் எல்லோராலும் அம்மா என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேல்மருவத்தூர் அன்னையின் ஆன்மிகம்

அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் அவதார நோக்கங்களில் மூன்று முக்கியமானவையாகும். அவை

  1. தெய்வ நம்பிகை தெய்வ பக்தி ஆன்மிக உணர்வுகள ஊட்டுதல்
  2. பெண்குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்துதல்
  3. அடித்தள மக்களை ஆன்மிக வழியில் உயர்த்துதல்

இக்கலியுகத்தில் மக்கள் இயந்திரமாக மாறிவிட்டனர். அடிப்படை மனிதப்பண்புகளை இழந்துவிட்டனர். இதனால் உலகத்தில் அதர்ம செயல்கள் அதிகரித்துவிட்டன. இளைய சமுதாயத்தினர் தவறான பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டனர். இந்நிலை நீடித்தால் இனி உலகம் என்னவாகுமோ என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு இவ்வுலம் தள்ளப்பட்டுவிட்டது. இதனைப் பொறுத்துக் கொள்ளமுடியாத அன்னை ஆதிபராசக்தி இக்கலியுகத்தில் தானே அவதாரமாக வந்து மக்களிடையே தெய்வபக்தியையும் ஆன்மிக உணர்வுளையும் ஏற்படுத்தி மக்கள் மனங்களை சாந்தப்படுத்தி மக்களை அழிவுப்பாதையிலிருந்து மீட்டுவருகிறாள். இளைய தலமுறைகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தன் ஆன்மிகத்தை எளிமைப்படுத்தி இளைய தலைமுறையினரை அதிகமாக இவ்ஆன்மிகத்தில் விருப்பத்துடன் ஈடுபடவைக்கிறாள். பெண்பிறவி என்பது பாவமல்ல பெண் திருஸ்டியில் தான் பராசக்தி தத்துவமே அடங்கியுள்ளது என்பதை உலகிற்கு உணர்த்தும் முகமாக பெண்களை ஆன்மகத்தில் ஈடுபட வைத்தார்கள் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் . எந்நாடு ஆன்மிகத்தில் பெண்களுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கிறதோ அந்த நாடே முன்னேற்றமடையும் என்ற உண்மையை உலகத்திற்கு உணர்த்தினார்கள். ” கருவை சுமக்கும் பெண்கள் ஏன் கருவறை போகமுடியாது” என்று பெண்களை கருவறைக்குள் சென்று பூசைகள் செய்யவும் வேள்விச் சக்கரங்கள் அமைக்கவும் வேள்விகள் செய்யவும் வழிகாட்டினார்கள். படித்தவர்களுக்கு மட்டும் ஆன்மிகம் என்றில்லாமல் படிக்காத பாமரமக்களுக்கும் ஆன்மிகம் என்பது அத்தியாவசியமானது என்பதால் அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்கும் புரியும் வகையில் தனது ஆன்மிக கருத்துக்களையும் பூசைமுறைகளையும் மிக எளிமையாக்கித் தந்தார் அருள் திரு பங்காரு அடிகளார் அவர்கள். அதுமட்டுமன்றி கடவுள் முன் எல்லோரும் சமம் எல்லோரும் என் பிள்ளைகள் தான் இதில் சாதி சமய பொருளாதார வேறுபாடுகள் தேவையில்லை . எல்லோருக்கும் இரத்தம் சிவப்பு. அதனால் என்னை வழிபடுபவர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்நு மனதில் எள்ளளவு வேற்றுமை உணர்வின்றி வாழவேண்டும் என்ற சமத்துவத்தை நடைமுறைப்படுத்திக் காட்டினார். அத்துடன் இயற்கை அனர்த்தங்களுக்கு காரணம் இயற்கையை வழிபடத் தவறியதுதான் என்று கூறி இயற்கை சீற்றங்களில் இருந்து உலகைக் காப்பாற்ற பஞ்சபூத வழிபாட்டு முறையை எமக்கு அருளி உலகத்தில் அவ்வப்போது ஏற்படும் இயற்கை சீற்றங்களால் பெரிய அளவில் அழிவுகள் வராமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமான அருள் திரு பங்காரு அடிகளார் அவர்கள்.